தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

திரைவிமர்சனம்

----------------------------------------------------------------------------------------
விமர்சனம் - பில்லா-2----------------------------------------------------------------------------------------


நடிகர் : அஜித் குமார--------------------------------------------------------------------------------------------

நடிகை : பார்வதி ஓமனக்குட்டன் இயக்குனர் :சக்ரி டோல்டி


.அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கதைகளில் கூட அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர், அஜீத்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்படி வெளிவந்திருக்கும் படம்தான் பில்லா 2.


தடுக்கி விழுந்தாலும் தமிழனாய் விழுவோம் தவறி எழுந்தாலும் தமிழனாய் எழுவோம்... என்றெல்லாம் பக்கம் பக்கமாய் டயலாக் பேசி சென்டிமெண்ட் டச் பண்ணும் மற்ற தமிழ் ஹீரோக்கள் கூட செய்யத் தயங்கும் இலங்கை அகதி கேரக்டரில் இதில் எண்டரி ஆகும் அஜீத்துக்குத்தான் என்ன துணிச்சல்.?! வாவ்., கள்ளத்தோணி மூலம் கடல் கடந்து இலங்கை அகதியாக இந்தியாவிற்கு எண்ட்ரி ஆகி., இராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்குள் எண்ட்ரி போட்டுவிட்டு "எஸ்" ஆகும் அஜீத், அதன்பிறகு எடுக்கும் அவதாரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக அவரை எங்கெங்கோ எடுத்து செல்வது தான் ஆச்சர்யம்! அதிசயம்!! லாரியில் மீனும், மீனுக்குள் வைரங்களையும் கடத்தும் அஜீத்., அடுத்து போதை பொருட்கள், அதற்கடுத்து ஆயுதங்கள் என கடத்தி இந்தியாவில் இருந்து இண்டர்நேஷனல் வரை எதிராளிகள் எல்லோரையும் தீர்த்துக்கட்டி குறுகிய காலத்திலேயே பெரிய டானாக., "டர்ன்" ஆவதுடன் தனது அக்கா மகள் ஜாஸ்மினாக வரும் பார்வதி ஓமனக் குட்டனை வில்லன்களிடத்தில் பறி கொடுத்து, பலி கொடுத்துவிட்டு, வில்லி சமீரா எனும் புருணா அப்துல்லாவை நல்லவர் என்று நம்பி மோசம் போய் பின்பு புத்திசாலித்தனமாக அவரைத் தீர்த்துகட்டி, மெயின் வில்லன் திமித்ரி எனும் வித்யாத்ஜாம்வெல்லையும் தீர்த்து கட்டுவதும் தான் பில்லா 2 படத்தின் மொத்த கதையும்!

அகதியாக, அமைதியாக எண்டரியாகும் அஜீத் அதற்கு முந்தைய காட்சியிலேயே அதாவது டைட்டிலுக்கு முந்தைய ஒரு ரீலிலேயே ஏழெட்டு வில்லன்களை எக்குத்தப்பாய் கத்தி, கை துப்பாக்கி உதவியுடன் தீர்த்து கட்டிவிட்டு "என் வாழ்க்கையை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு நொடியும் நானா திட்டமிட்டடு செதுக்கினது டா... என்னை யாரும் அவ்வளவு எளிதில் தீர்த்துகட்டிட முடியாது..." என கர்ஜிப்பதில் தொடங்கி "எனக்கு நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம். ஆனால் எதிரியா இருக்க நிறைய தகுதிகள் வேண்டும்... அது உன்கிட்டே இல்லை..." என ஒவ்வொருவராய் தீர்த்துகட்டுவது வரை ஒவ்வொரு சீனிலும் ஒரு பெரும் கடத்தல் மன்னனாகவே வழ்ந்திருக்கிறார் பலே!


அதே சமயம் இலங்கை அகதியாக அறிமுகமாகும் அஜித்., அந்த ஈழத்தமிழர்களுக்காக ஏதேதோ செய்யத்தான் "டான்" ஆகிறார் எனப் பார்த்தால், அடுத்தடுத்து அதை கடத்துவது, இதை கடத்துவது, அவரை போட்டு தள்ளுவது, இவரை தீர்த்துக் கட்டுவது... என கிரிமினல் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறாரே ஒழிய, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாதது ஏமாற்றத்தையே தருகிறது. மற்றபடி "இது ஆசை இல்ல பசி என்பதும், போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்வதும், "இதுவரை காட்டி கொடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க..." தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் பார்க்கும் போது., ஏதோ எடுக்க நினைத்து அது சென்சாரில் ஏதேதோ ஆகியிருப்பது புரிகிறது! அப்பட்டமாகவும் தெரிகிறது.


சீன் பை சீன் எதிர்படுபவர்களை எல்லாம் துப்பாக்கியும் கையுமாக போட்டுத்தள்ளும் அஜீத் போன்றே பார்வதி ஓமனக்குட்டன், புருனா அப்துல்லா, மனோஜ் கே. ஜெயன், அப்பாசியாக வரும் சுதான்ஷூ பாண்டே, திமித்ரி-வித்யாத், செல்வராஜ்-இளவரசு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் படமுழுக்க பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி கவர்ச்சி உடையில் வரும் இளம் பெண்கள் படத்தின் பெரும்பலம். ஒரு "ஏ" சர்டிபிகேட் படத்திற்கு இதைவிட வேறென்ன பெரும் பலமாக இருக்க முடியும்.?!

அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் காட்டிலும் ஆர்.டி.ராஜசேகரின் அழகிய ஒளிப்பதிவும், யுவன் சங்கரராஜாவின் இனிய இசையும், சக்ரி டோலட்டியின் 1980களை காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்து இயக்கமும் இரா. முருகன், முகம்மது ஜாபரின் நச் டச் வசனங்களும் படத்தை பல மடங்கு பிரமாண்டபடுத்தி காட்டியிருக்கின்றன என்றால் மிகையில்லை!

80களில் செல்போனே இல்லாத காலத்தில் வில்லன் திமித்ரி தன் பிஸினஸ் பார்ட்னர்களுக்கு லைவ்ஸ்கிரீனில் தன் ஆயுத ஆலையை காண்பிப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் "பில்லா-2", இல்ல, "நல்லா" என்று ரசிகர்களை கதற விடாத அளவில் இருப்பது ஆறுதல்!

ஆகமொத்தத்தில் “பில்லா இருக்கு நல்லா.?! அப்பாடா!!




விமர்சனம் - மனம் கொத்தி பறவை
-------------------------------------------------------------------------------------------
நடிகர் : சிவகார்த்திகேயன்    நடிகை : ஆத்மியா    இயக்குனர் :எழில்

"மெரினா" படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம்... "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் ‌ஏற்படுத்தி தந்த இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வெளிவந்திருக்கும் காதல் ப(பா)டம் தான் "மனம் கொத்தி பறவை" என்றால் மிகையல்ல!



கதைப்படி வேறு வேறு சமூகத்தை சேர்ந்த எதிர், எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள் நாயகன் சிவகார்த்திகேயனும், புதுமுக நாயகி ஆத்மியாவும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்த நாயகி மீது நாயகருக்கு காதல் என்றால் அப்படி ஒரு காதல்! ஆனால், கல்விதரத்திலும், வாழ்க்கை தரத்திலும், சமூக அந்தஸ்த்திலும் மிகவும் உயர்ந்த நாயகியிடம் தன் காதலை சொல்ல நாயகருக்கு பயங்கர தயக்கம்! ஆனால், நாயகி நட்பாக தன்னிடம் பழகுவதை எல்லாம் தன் ஆண் நட்பு வட்டாரத்தில் தப்பாக இல்லை, இல்லை... காதலாக கலந்துகட்டி சொல்லும் நாயகர் தனது பொய்களாலேயே நாயகியின் திருமணம் நின்று போக காரணமாகிறார். அப்புறம்? அப்புறமென்ன...? நாயகிக்கும், நாயகர் மீது காதல் இருந்ததா? இல்லையா...? உற்றார், ஊரார் எத‌ிர்பார்ப்பையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா...? இல்லையா...? என்பது மனம் கொத்தி பறவை படத்தின் பக் பக் மீதிக்கதை!

கண்ணனாக, காதலனாக, கதாநாயகராக சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார். தன் தந்தை இளவரசு சொல்லும் வேலைகளை தட்டிக்கழித்தும், எதிர்வீட்டு நாயகியின் குடும்பத்தார் சொல்லும் காரியங்களை "எள்" என்பதற்குள் எண்ணெய் ஆக்கி முடிப்பதுமாக கலக்கி இருக்கிறார் சிவகார்த்தி! நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தும் சிவகார்த்தி ஏனோ தெரியவில்லை... ஹீரோவாக நம் மனதில் ஒட்ட மறுப்பது சற்றே மைனஸ்! மற்றபடி ஓ.கே.!!

ரேவதி பாத்திரத்தில் வரும் ஆத்மியா பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "ஆத்ம" திருப்தியா!


சிங்கம் புலி, பரோட்டா சூரி, வெண்ணிறை ஆடை மூர்த்தி, சாமஸ், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் காமெடிக்கு கியாரண்டி கூறுகிறார்கள். பலே! பலே! இளவரசு, ரவிமரியா, கி‌ஷோர், ஆடுகளம் நரேன், வனிதா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

டி.இமானின் இசையில் "டங்... டங்..." மற்றும் "போ போ... போ..." உள்ளிட்ட பாடல்கள் படத்தின் பெரியபலம்! சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு ஆஹா ஓஹோ பதிவு!

"காதலுக்கு மரியாதை" க்ளைமாக்ஸை மீண்டும் ஒரு முறை க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பதை மட்டும் இயக்குநர் எஸ்.எழில் தவிர்த்திருந்தார் என்றால் "மனம் கொத்தி பறவை" மேலும் பெருவாரியான ரசிகர்களின் மனங்களை கொத்திப் பறந்திருக்கும் எனலாம்!

---------------------------------------------------------------------------------------------
விமர்சனம் -  கலகலப்பு
--------------------------------------------------------------------------------------------

நடிகர் : ஸ்ரீ நடிகை : ஊர்மிளா இயக்குனர் :பாலாஜி சக்திவேல்


நடிகர் : விமல் நடிகை : அஞ்சலி இயக்குனர் :சுந்தர்.சி

கதாநாயகி குஷ்புவே மாஜி கதாநாயகி ஆன பின்பு, அவரை காதலித்து கரம்பிடித்த சுந்தர்.சி, இனியும் கதாநாயகராக காலம் தள்ள முடியாது எனும் நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் "கலகலப்பு". சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது! இந்தப்படத்திற்கு டைட்டிலேயே கலகலப்பு என வைத்தவர் காமெடிக்கு பஞ்சம் வைப்பாரா என்ன...? படம் மொத்தமும் சிரிப்பும், களிப்புமாய் கலக்குதப்பு! என சொல்ல வைக்கும் விதத்தில் இருக்கிறது! பேஷ், பேஷ்!!


கதைப்படி பரம்பரை பரம்பரையாக தங்கள் வசம் இருந்து வரும் ஹோட்டலை இந்தகாலத்திலும் காப்பாற்றி கரை சேர்க்க போராடும் அண்ணன் - தம்பிகள் "களவாணி" விமலும், "தமிழ்படம்" சிவாவும்! அண்ணன் விமலுக்கு சுகாதார அதிகாரி அஞ்சலியுடன் காதல். தம்பி சிவாவுக்கு, விமல் படிக்க வைத்து காப்பாற்றி வரும் ஓவியா மீது காதல்! அஞ்சலி மீதான காதலால் விமல் ஒரு கட்டத்தில் ஹோட்டலை விட்டு தூர தேசம் செல்ல வேண்டிய சூழல்! அந்த சூழலில் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடம் சிவா, ஹோட்டலை வைத்து சூதாடுகிறார்! தோற்றுபோகிறார்! அஞ்சலியின் தாய்மாமன் சந்தானத்திடமிருந்து அஞ்சலியையும், தம்பியை ஏமாற்றி சூதாட்டத்தில் ஹோட்டலை அபகரித்தவர்களிடமிருந்து ஹோட்டலையும் விமல் எவ்வாறு மீட்கிறார்? சிவா அதற்கு எப்படி துணை நிற்கிறார்? என்பது தான் கலகலப்பு படத்தின் மொத்த கதையும். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை கலக்கலாக, கம்ர்ஷியலாக சொல்லி இருக்கும் சுந்தர்.சிக்கு சொல்லியே ஆக வேண்டும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!

ஹோட்டலை டெவெலப் பண்ணுகிறேன் பேர்வழி, என அங்கே இங்கே வட்டிக்கு வாங்கி, ஒவ்வொரு முறையும் பெரிய நஷ்டமாகி கடன்காரர்க‌ளை கண்டு ஓடி ஓளியும் அப்பாவி பாத்திரத்தில் விமல் வெளுத்து வாங்கியிருக்கிறார். சுகாதார அதிகாரி அஞ்சலிதான் என தெரியாமல் அவரிடம் எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு பின் எஸ்கேப் ஆகும் இடங்களில் விமல் பிரமாதம்!

சிவா திருடனாக ஜெயிலுக்கு போனதை மறைக்க துபாய்க்கு போய் திரும்பியதாக ஓவியாவுக்கு ரூட் விடுவதும், உண்மை தெரிந்ததும் அசடு வழிவதுமாக அலட்டி கொள்ளாத நடிப்பில் ஆங்காங்கே விமலையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சிவா, அண்ணன் காதலி அஞ்சலிக்காக ஹேண்ட்பேக்கும், தன் காதலி ஓவியாவிற்காக பலவிதமான பொருட்களையும் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸீக்குள் மாறுவேடத்தில் புகுந்து திருடி கொண்டு வரும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

அஞ்சலி, ஓவியா என இரண்டு கதாநாயகிகள் இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். நடிப்பில் மட்டுமல்ல, கவர்ச்சி விருந்து படைப்பதிலும் இருவரும் போட்டிபோட்டு கலகலப்பை கவர்ச்சியாய் ஆக்கியிருப்பது படத்தின் பெரும்பலம்!


அஞ்சலியின் முறைமாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், கிட்டத்தட்ட படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவர் எனும் அளவிற்கு காமெடி ப்ளஸ் காமநெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பஞ்சு சுப்பு பத்துகோடி வைரத்தை செல்போனில் மறைத்து வைத்து தெரிந்தவரிடம் கொடுத்து வைத்து இன்சூரன்ஸ் பெற முயற்சிப்பது, அந்த வைரங்கள் விபச்சார அழகிகள், புரோக்கர், போலீஸ், ரவுடி என கைமாறி விமல் - சிவா கைகளில் சிக்குவது, அதை திரும்பபெற விமலின் நண்பர் கம் வில்லன் போலீஸ் ஜான் விஜய்யும் பஞ்சு சுப்புவும் பண்ணும் காமெடி கலாட்டக்கள், அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசு, காமெடி போலீஸ் ஜார்ஜ் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களே தரையில் விழுந்து, எழுந்து, தவழ்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில குறைகள் இருந்தாலும் யு.கே.செந்தில்குமாரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும், விஜய் எபினேசரின் இதமான இசை, சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவான எழுத்து - இயக்கம் உள்ளிட்டவைகள் கலகலப்பு படத்தை லாஜிக் பார்க்காமல் ரசிக்க வரும் ரசிகர்களுக்கு ‌காமெடி மேஜிக் எனலாம்.

மொத்தத்தில் கலகலப்பு - கலக்குதப்பு!

--------------------------------------------------------------------------------------------
விமர்சனம்-வழக்கு எண் 18/9

---------------------------------------------------------------------------------------------
நடிகர் : ஸ்ரீ    நடிகை : ஊர்மிளா   இயக்குனர் :பாலாஜி சக்திவேல்வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் தான் "வழக்கு எண் 18/9" படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! "காதல்" படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு காதல் படைப்பு மட்டுமல்ல... காதல் - காவல் காவிய படைப்பும் கூட!

.


கதைப்படி, ரோட்டோர டிபன் கடையில் வேலை பார்க்கும் அநாதை வேலுவுக்கு, அவன் கடையை ஒட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி மீது காதல். ஆனால் இந்த காதல் கசிந்துருவதற்குள், வேறு சில காரணங்களால் ‌வேலு மீது தப்பான அபிப்ராயம் கொண்டு வெறுப்பை உமிழ்கிறார் ஜோதி! இந்நிலையில் ஜோதி வீட்டு வேலை செய்யும் வசதியான வீட்டுப்பெண் ஆர்த்தி மீது அதே ப்ளாட்டில் வசிக்கும் அர்த்தியை விட வசதியான தினேஷூக்கு காதல் போர்வையில் காமம்! அந்த காமமும், காதலும் ஆர்த்தியை, ஆபாசமாக தனது செல்போனில் படமெடுத்து அதை நண்பர்களின் போனில் உலவ செய்து, பெருமை பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் தினேஷூக்கு ஏற்படுகிறது. இது தெரியாமல் தினேஷின் வலையில் விழும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு தினேஷை விட்டு விலக, தன் நோக்கம் நிறைவேறாத வருத்தத்தில் தினேஷ், ஆர்த்திக்கு அடிக்கும் ஆசிட், குறிதவறி ஜோதியின் முகத்தையும், முக்கால்வாசி உடம்பையும் பதம்பார்க்கிறது.

ஜோதியின் அம்மா உள்ளிட்டவர்களின் கூற்றுபடி ஆசிட் அடித்தது வேலு தான் என விசாரணை கைதியாக பிடித்து வரும் ‌காவல்துறை, காசுக்கு ஆசைப்பட்டு தனது குள்ளநரித்தனத்தால் அவரையே குற்றவாளியாகவும் கோர்ட்டின் முன் நிறுத்துகிறது. இந்த வழக்கில் இருந்து வேலு தப்பித்தாரா...? உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா...? ஜோதியின் மீதான வேலுவின் காதல் என்னாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடையளிக்கிறது வழக்கு எண் 18/9 படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்பான மீதிக்கதை!

வேலுவாக புதுமுகம் ஸ்ரீ, ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடை வேலையாளாகாவே வாழ்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜோதியாக வரும் வீட்டு வேலைப்பெண்ணாக சட்டை, பாவாடையில் கையில் தூக்குவாளி கூடையுடன் வரும் ஊர்மிளாவும் காரமிளையாக கலக்கி எடுத்திருக்கிறார். இவர்களை மாதிரியே தினேஷாக வரும் மிதுன் முரளி, ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ் உள்ளிட்ட புதுமுகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!


மேற்படி இந்த ஜோடிகளைக் காட்டிலும் ஒருபடி மேலாக ஸ்ரீயின் அப்பா-அம்மாவாக ஒரு சில காட்சிகளே வரும் வேடியப்பன் எனும் செந்தில், ராணி, தினேஷ் எனும் மிதுனின் தாயாக மினிஸ்டரின் கீப்பாக வரும் ராதிகா, ஆர்த்தி எனும் மனிஷாவின் தாய் தந்தையாக வரும் கவுதம், வித்யா-ஈஸ்வர், ஊர்மிளா எனும் ஜோதியின் தாயாக வரும் பார்வதி, ஸ்ரீக்கு வேலை வாங்கி தரும் "ஒரு மாதிரி" தோழியாக தேவி எனும் ரோஸி உள்ளிட்ட துணை, இணை நடிகர்கள் கூட பிரமாதம் போங்கள்... எனும் அளவு நடித்திருப்பது படத்தின் பெரியபலம்! இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நல்லவர் மாதிரி வாயாலேயே "வடை சுடும்" புதுமுகம் முத்துராமனும், ஸ்ரீயின் ரோட்டுகடை உதவியாளனாக காமெடி பண்ணும் சின்னசாமியும் சற்றே வறண்ட கதைக்களத்தை மறைத்து கலர்புல்லாக படத்தை பிரமாதமாக தூக்கி நிறுத்தி, வழக்கு எண் படத்திற்கு வெற்றி வாக்குளை சேர்க்கின்றனர். பேஷ்! பேஷ்!!

முதல்பாதி சற்று மெதுவாக நகர்வதும், படம்முழுக்க ஒருவித சோகம் பரவிக்கிடப்பதும் சற்றே டாக்குமெண்ட்ரி ‌எபெக்ட்டை கொடுத்தாலும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் அழகிய பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும், எஸ்.டி.விஜய் மில்டனின் வித்தியாசமான புதுவித ஒளிப்பதிவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்தாழமிக்க எழுத்தும்-இயக்கமும் மைனஸ் பாயண்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பிளஸ் பாயிண்டுகளை ‌நோக்கியே படத்தை இழுத்து சென்றிருப்பது, வழக்கு எண்ணை நம் வாழ்க்கையாக பிரதிபலிக்க செய்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் "வழக்கு எண் 18/9" , வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் என்றென்றும் வாழும் "நம்பர்-ஒன்!"


-----------------------------------------------------------------------------------------
விமர்சனம் - ஒ ரு கல் ஒரு கண்ணாடி
..................................................................................................................................

நடிகர் : உதயநிதி ஸ்டாலின் நடிகை : ஹன்சிகா மோத்வானி
இயக்குனர் :ராஜேஷ்

குறுகிய காலத்தில் மிகப்‌பெரிய பிரம்மாண்ட தயாரிப்பாளராக பெயரெடுத்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் அதிரடி திரைப்படம் தான் "ஒரு கல் ஒரு கண்ணாடி"! அதிரடி என்றதும் ஏதோ உதயநிதி முதல் படத்திலேயே ஐம்பது, அறுபது அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணி, நம்ப முடியாத வகையில் நம்மூர் நாயகர்(ஏற்கனவே இருக்கும்...) களையே மிஞ்சி விடுகிறாராக்கும் என நீங்கள் கருதினால், அதுதான் இல்லை! தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து உதயநிதி, சந்தானத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு காமெடியில் அதிரடி செய்து அசத்தியிருப்பது தான் ஹைலைட்

கதைப்படி, உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் குழந்தைப் பருவத்திலிருந்தே குறும்புக்கார நண்பர்கள். இருவரும் பெண்களின் சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்து வந்தால் கூட அதை துரத்திப்போகும் அளவிற்கு காதலி கிடைக்க காத்திருப்பவர்கள்... அவர்கள் இருவரின் எண்ணப்படியே இருவருக்கும் காதலிகள் கிடைக்க, நட்புதான் பெரிதென இவர், அவரது காதலுக்கும், அவர் இவரது காதலுக்கும் மாறி மாறி ஆப்புகள் வைக்க, நட்பு காதலை வென்றதா? காதல் நட்பை கொன்றதா.? இல்லை இரண்டும் ஒன்றை ஒன்று கட்டி காத்ததா...? என்பதுதான் க்ளைமாக்ஸ்!


இந்தக்கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்ஃபுல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-மிற்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும்! மனிதர் தனது முந்தைய வெற்றிப்படங்களான "சிவா மனசுல சக்தி", "பாஸ் என்கிற பாஸ்கரன்" படங்களைக் காட்டிலும் காமெடியில் புகுந்து விளையாடியிருப்பது பேஷ், பேஷ்... சொல்லுமளவிற்கு பிரமாதமாய் இருக்கிறது!

இயக்குநர் எதிர்பார்த்ததை எள் அளவும் பிசாகமல், பிரமாதமாக செய்து இருக்கிறார் ஹீரோ சரவணன் பாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின்! சத்யம் சினிமாஸில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கேரக்டரில் வெல்கம் டூ சத்யம் சினிமாஸ் என்றபடியே டிக்கெட் கிழித்து கொடுப்பதில் தொடங்கி, போலீஸ் உயரதிகாரி ஷியாஜி ஷிண்டேயின் மகள் ஹன்சிகாவை தைரியமாக டாவு அடிப்பது வரை சீன் பை சீன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் "யூத்"துகளை கவரும் வகையில் "நச்" என்று நடித்திருக்கும் உதயநிதிக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதையும் காட்டிக் கொள்ளாமல் பாடல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பது பலே, பலே சொல்ல வைத்து விடுகிறது! அப்பா ஸ்டாலினால் கலைத்துறையில் முடியாததை மகன் உதயநிதி நிச்சயம் நிறைவேற்றி காட்டுவார் என்பது நிதர்சனம்!

இரண்டாவது நாயகர், இரண்டு நாயகர்களில் ஒருவர்... எனும் அளவிற்கு சந்தானம் வாயை திறந்தாலே, அவ்வளவு ஏன் சந்தானம் வந்தாலே... தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது! அவரும் சளைக்காமல், தத்துவமாகட்டும், காமெடியாகட்டும், காமநெடியாகட்டும் அத்தனையிலும் அடித்து தூள் பறத்தியிருப்பது ஓ.கே. ஓ.கே. படத்திற்கு டபுள் ஓ.கே. சொல்ல வைக்கிறது! ஒரு சீனில் மேஜை மீது ஒரு கிளாஸை வைத்து அதில் சரக்கை ஊற்றி, இது நீ, இதில் ஊற்றும் தண்ணீர் உன் காதலி, இந்த க்ளாஸ் தான் என்ன மாதிரி நண்பர்கள்... என அவர் அடிக்கும் தத்துவ டயலாக் ஆகட்டும், பேட், பேட், பேட் என்றபடி குதிக்கும் இடங்கள் ஆகட்டும் எல்லாமே சூப்பர்!

கதாநாயகி ஹன்சிகா, ஒரு சீனில் உதயநிதி சொல்வது மாதிரி ஒவ்வொரு சீனிலும் "சின்னத்தம்பி" குஷ்பு மாதிரியே அழகாக இருக்கிறார், வருகிறார், சிரிக்கிறார், போகிறார்! உதயநிதியின் அப்பா-அம்மாவாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா இருவருக்கும் இடையேயான 20 வருட ஊடல் ஒரு மாதிரி சென்டிமெண்ட் டச்!

ஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு எல்லாமே பாடல் காட்சிகளுக்கும், படக்காட்சிகளுக்கும் பெரிய பலம்!

ஆசிரியர் வேலை பார்க்கும் அழகம் பெருமாளை உதயநிதி, வாத்தி வாத்தி... என அடிக்கடி விளிப்பது, கோயில் குளத்து படித்துறையில் அமர்ந்தபடி சூரத் தேங்காய் சில்களை பொறுக்கி தின்று அவற்றை குளத்திற்குள் வீசுவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆர்யா, சினேகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட கெஸ்ட் ரோலில் வரும் நட்சத்திரங்களையும் கூட, பெஸ்ட் ரோலாக ரசிகர்கள் மனதில் நிற்க வைக்கும் அளவிற்கு காமெடி வித்தை தெரிந்த ரா‌ஜேஷ்.எம்-மின் எழுத்து-இயக்கத்தில்

---------------------------------------------------------------------------------------------------------
( 3) விமர்சனம் 
..................................................................................................................................


நடிகர் : தனுஷ் நடிகை: ஸ்ருதிஹாசன்இயக்குனர் :ஐஸ்வர்யா தனுஷ்

படம் வெளிவருவதற்கு முன்பே உலகம் முழுக்க பாப்புலரான "ஒய் திஸ் கொலவெறி..." பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கும் 2வது தமிழ்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ‌வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "3".

கதைப்படி பள்ளிப்பருவ காதல், பருவ வயதிலும் தொடர்ந்து ‌பெரிதாக, எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்தில் இணைகிறது தனுஷ் - ஸ்ருதிஹாசன் ஜோடி! பிஸினஸில் பல கோடிகள் நஷ்டமாகும் தனுஷ், "பை போலா டிஸ்ஆர்டர்" எனும் ஒரு வித வாயில் பெயர் நுழையாத மனநோயால் பாதிக்கப்பட்டு, ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதரையம் கடித்த கதையாக, பேயைப்பார்த்து, நாயை அடித்து (கொன்று), நண்பனையும் கடித்து, காதல் மனைவியையும் கொல்லத் துடிக்கிறார். மனநோய் முற்றி தனுஷ், மனைவி ஸ்ருதியை கொன்றாரா...? தன்னை தானே மாய்த்துக் கொண்டாரா...? என்பது தான் "3" படத்தின் திருப்பங்களும்(?) குழப்பங்களும்(!) நிறைந்த மீதிக்கதை!

தனுஷ், ராம் என்ற பாத்திரத்தில் மாணவராகவும், மணாளனா(நாயகி ஸ்ருதியின் மனம் கவர்ந்த)கவும், மனநோயாகளியாகவும் வெவ்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்! பள்ளி மாணவராக சக மாணவி ஸ்ருதியின் பின்னால் அலைந்து, அவரது அப்பாவிடம் ப்ளார் என அறை வாங்கிய பின்பும், மறுநாளே அவர் வீட்டு வாசலில் போய் துணிச்சலாக நின்று "ஐ லவ் யூ" சொல்லு என அடம் பிடிப்பதில் தொடங்கி... மனநோய் முற்றி நாயகியின் "பெட்"டான நாயைக் கொன்று நாடகமாடி, நண்பனின் ம‌ண்டையை உடைத்து, நாயகியையும் கொல்லத் துணிவது வரை...பிரமாதமாக ராம் பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கும் தனுஷ், தன்னை தானே மாய்த்துக் கொள்வது, என்னதான் வாயில் பெயர் நுழையாத வியாதி என்றாலும் சற்றே ஓவர் ஆக்டிங்காக தெரிவது பலவீனம்.

ஸ்ருதிஹாசன், ஜனனி பாத்திரத்தில் மாணவி, காதலி, மனைவி என வெவ்‌வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான நடிப்பைக் காட்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். கமலின் மகளா கொக்கா...? எனும் அளவிற்கு முத்தக்காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருப்பது புரட்சி! க்ளைமாக்ஸில் தனுஷ் தன்னைத் தானே தீர்த்துக் கொண்ட விதம் குறித்து அவரது நண்பர் செந்தில் சொல்ல கேட்டு கதறும், அதிரும் காட்சிகளில் ஸ்ருதியின் நடிப்பு திரையரங்கில் பச்சாயத்தை ஏற்படுத்துவதற்கு பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவது "3" படத்தின் மற்றுமொரு பெரிய பலவீனம்!

மற்றபடி தனுஷ், ஸ்ருதி மாதிரியே அவர்களது நண்பர்களாக வரும் செந்தில் மற்றும் குமார் எனும் சிவகார்த்திகேயன், டியூசன் மாஸ்டர், தனுஷின் அப்பா பிரபு, அம்மா பானுப்ரியா, ஸ்ருதியின் அம்மாவாக வரும் ரோஹினி, ஸ்ருதியின் தங்கையாக வாய்பேச முடியாத பள்ளி சிறுமியாக வரும் பேபி நட்சத்திரம் உள்ளிட்ட எல்லோரும் நச் என்று நடித்து நம்மை டச் பண்ணி விடுகிறார்கள் பலே பலே! அதிலும் அப்பா நடிகர் ஆகிவிட்ட பிரபு பிரமாதம்! லைப் மேட்டர் பேசணும்பா... என அடிக்கடி அப்பா பிரபுவின் முன் தனுஷ் நிற்பதும், பிரபு முதலில் மகனை சிரிப்பாக்குவதும், பின் தனுஷ் சொல்லும் விஷயத்தை சீரியஸாக அணுவதும் பிரமாதம். தனுஷ் தான் சாவதற்கு முன் அப்படி ஒரு லைப் மேட்டரை பிரபுவிடம் பேசப்போய், அதற்கு ஓ.கே. சொல்லும் பிரபு, இனி அப்படி பேசவரக்கூடாது என தனுஷை எச்சரிப்பதும் சென்டிமெண்ட் டச்!

ஆர்.வேல்ராஜின் குதுகலமான ஒளிப்பதிவு, அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் கொலவெறி இசை( எதிர்பார்த்த அளவுக்கு விஷூவலாக கொலவெறி ஒன்னும் பெரிதாக இல்லை) உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் 3-யை முன்பாதியில் சரியாகவும், பின்பாதியில் சரியும்படியும் இயக்கி இருக்கும் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் மிகவும் துணிச்சல்காரர்தான்! இல்லையென்றால் தன் கணவர் தனுஷை, என்னதான் கதைக்காக என்றாலும் கதாநாயகி ஸ்ருதியுடன் அத்தனை நெருக்கமாக நடிக்க வைத்து, அதை வெறும் காமிரா கண்களோடு மட்டும் பார்த்து ரசித்திருக்க முடியுமா...? அந்த தைரியத்திற்காகவே ஐஸ்வர்யாவை பாராட்டலாம்! மேலும் சின்ன வயது முதல் தான் மிகவும் நெருக்கமாக பார்த்து, பயந்த, தெளிந்த யாரோ ஒருவருடைய கதையில் தன் கண்வர் தனுஷை நடிக்க வைத்து, தன் மனதில் இதுநாள் வரை சிறைபட்டுக்கிடந்த சிக்கலான விஷயங்களை எல்லாம் சீனாக்கி "3" படத்தை செதுக்கி இருக்கறாரோ இயக்குநர்...? எனும் அளவிற்கு அறிமுக படத்திலேயே அத்தனை விஷயங்களையும், அவசரம் அவசரமாக திணித்திருக்கும் ஐஸ்வர்யா அடுத்தடுத்த படங்களில் என்ன செய்யப் போகிறார்...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

படத்தின் முன்பாதி காமெடி தூணாக விளங்கும் சிவகார்த்திகேயன், சிங்கப்பூர் போய்விட்டதாக திடீரென தனுஷூம், செந்திலும் டயலாக்கிலேயே அவர் எஸ்கேப் ஆன சீனை முடிப்பது ஏன்...? மனைவியிடம் தனக்கு மனநோய் என்பதை காட்டிக் கொண்டு ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ள விரும்பாத தனுஷ், நிரந்தரமாக தன்னை மாய்த்துக் கொண்டு மனைவியை அம்போ என விடத்துணிவது எதற்கு...? தனுஷ் படம் என்றாலே உடன் இருக்கும் உயிர் நண்பனின் மண்டையை பீர் பாட்டிலால் தனுஷ் பிளந்தே ஆகவேண்டும் என்பதை ஐஸ்வர்யாவின் படத்திலும் காட்சிபடுத்தியிருப்பது எப்படி...? என்பது உள்ளிட்ட இன்னும் பல விவாத வினாக்கள் "3" படத்தை பார்த்ததும் எழுவது, சகஜமென்றாலும், தன் அக்கா ஸ்ருதி அவரது காதலுக்காக அப்பா, அம்மாவிடம் அடிவாங்கும் காட்சியில் வாய்பேச முடியாத தங்கை தயங்கி, தயங்கி போட்டும் விடுப்பா... என ஆச்சர்யப்படுத்தும் வகையில் பேசி அக்காவின் காதலுக்கு பெற்றோரை அரை மனது குறைமனதாக பச்சைகொடி காட்ட வைக்கும் ஒரு காட்சி போதும் அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷின் நெறியாள்கை ‌நேர்மைக்கு கட்டியம் கூற! வாவ் கீப் இட் அப் மிஸஸ் தனுஷ்!!

எல்லாதரப்பினரையும் சற்றே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாக்கி வரும் இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில், மனநோயாளி சைக்கோ, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... கேரக்டர்களை ஹீரோவாக்கி அவர்களின் மனம் மேலும் சிதையக் காரணமாகும் இதுபோன்ற கதைகளால் என்ன லாபம் இருக்க முடியும்...?! என இயக்குநரை பார்த்து கேட்கத் தோன்றினாலும், ஐஸ்வர்யா தனுஷ் தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நூறு சதவிகிதம் உண்மையாக உழைத்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு பிரேமும் சொல்கிறது! அதுவே "3"க்கு கிடைத்த "நம்பர்-1".



----------------------------------------------------------------------------------------------
நண்பன் -விமர்சனம்
-------------------------------------------------------------------------------------------------
நடிகர் : விஜய்    நடிகை : இலியானா    இயக்குனர் :ஷங்கர்



த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!



பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.


விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!



சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!


கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா! அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!


இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!


ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல


நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!



ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!


ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்
------------------------------------------------------------------------------------------------
அஜித்தின் பில்லா-2 போஸ்டர்கள் வெளியீடு! 
----------------------------------------------------------------------
அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


தூத்துக்குடியில் சாதரண மனிதனாக டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தின் சூட்டிங் ‌பெரும்பகுதி முடிவடைந்துள்ள நிலையில் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. கோவப்பார்வையோடும், கையில் துப்பாக்கியோடும் வெளியாகியுள்ள இந்த ஸ்டில்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கூடவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு, அதேபோல் ஒவ்வொரு டானுக்கும் ஒரு வரலாறு உண்டு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------

                                      போராளி >> விமர்சனம்
---------------------------------------------------------------------------------------------------------------

நடிகர் : சசிகுமார்   நடிகை : சுவாதி   இயக்குனர் :சமுத்திரக்கனி

"நாடோடிகள்" வெற்றி கூட்டணி எம்.சசிகுமாரும், பி.சமுத்திர கனியும் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "போராளி!"

கதைப்படி, ஹீரோ சசிகுமாரையும், செகண்ட் ஹீரோ நரேஷையும் கும்மிருட்டில், கொட்டும் மழையில், கொலை வெறியோடு மூர்க்கத்தனமாக ஒருத்தர் துரத்த, அவரிடமிருந்து ஒருவழியாக தப்பி பிழைக்கும் இருவரும் சென்னையில், பொய் வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கிராமத்து நண்பன் கஞ்சா கருப்பு, தங்கியிருக்கும் அறைக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். அங்கு கருப்பு மட்டுமல்ல, அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மற்றவர்களும், இவர்கள் இருவருக்கும் அடைக்கலம் தர மறுக்க, ஹவுஸ் ஓனர், பேராசிரியர் ஞானசம்பந்தம் மட்டும் தீர்ப்பு நான் தான் சொல்வேன்... என்று, இருவரது முகத்திலும் ஒளி தெரிவதாக சொல்லி, கருப்புவின் அறையில் இவர்களை சேர்த்துக்கொள்ள சொல்வதுடன் சசிக்கு, தன்மகளையும் கட்டி தரும் முடிவில் இறங்குகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சிட்டிக்கு வந்த இருவரும் ஞானவேல் அண்ணாச்சியின் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே, பார்ட் டைமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் பல பேருக்கு வேலை வாங்கி தருகின்றனர். இதைப்பார்த்து இவர்களது வீட்டின் அருகில் சினிமா டான்ஸராக இருக்கும் ஹீரோயின் சுவாதிக்கு-சசிக்குமார் மீதும், பெட்ரோல் பங்கில் உடன் வேலைபார்க்கும் நிவேதாவிற்கு-நரேஷ் மீதும் காதல் கண்ணை மூடிக்கொண்டி வருகிறது. இப்படி தாங்களும் வளர்ந்து சைடில் இருப்பவர்களையும் வாழவைக்கும் சசிகுமார், நரேஷ் இருவர் மீதும் பைத்தியார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த பைத்தியங்கள்... எனும் குற்றச்சாட்டு இண்டரவெல்லுக்கு முன் இடியென வந்து விழ,

அவர்களை தேடிவந்த கிராமத்து ஆசாமிகளுடன் கிளம்பினார்களா...? இல்லை, தாங்கள் பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்து, தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்களா...? என்பது போராளி படத்தின் போராட்டமான மீதிக்கதை!

சிலோன் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது, இவளுக்கு சிலோன் பரோட்டா வேண்டுமாம் என்பது உள்ளிட்ட டச்சிங் டயலாக் பேசியபடி இளங்குமரனாக வரும் சசிகுமார், முன்பாதியில் ஃபிரேம் டூ ஃபிரேம் தான் செம மூளைக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்பாதியில் உறவுகளால் ‌பைத்தியம் ஆக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே சித்த பிரமை பிடித்தவர் போன்றே தெரிவது மைனஸ்! சசிகுமாரின் முன்பாதி துருதுறுப்பும், சுறுசுறுப்பும் பின்பாதியில் இல்லாமல் இருப்பது படத்தையும் ஸ்லோவாக்கி விடுவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

குறும்பு நரேஷ், அல்லாரி நரேஷாக தெலுங்கில் செம பிரபலம் என்றால், தமிழில் குறும்பு படத்திற்குப்பின் மீண்டும் இப்பொழுது தான் வந்திருக்கிறார். சுயநிலை இழக்கும் இடங்களில் நடிப்பில் மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

சுவாதி, நிவேதா, வசுந்த்ரா மூவருமே முக்கிய பங்காற்றும் நாயகி என்றாலும், மூவரில் பின்பாதியில் ஆட்டுக்கார அலமேலு... எனும் ரீதியில் ஈட்டி, கம்பும் கையுமாக வீராவேசமாக வரும் வசுந்த்ரா பிரமாதம். கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஜெயபிரகாஷ், ஞானசம்பந்தாம், ஞானவேல், நமோ நாராயணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

சுந்தர்.சி.பாபுவின் அதிரடி இசை, எஸ்.ஆர்.கதிரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் இயக்குநர் பி.சமுத்திரகனி, போராளி படத்தில் நிறையவே போராடி இருப்பது தெரிகிறது. அதற்கான வெற்றி எவ்வளவு என்பது ரசிகர்களின் தீர்ப்பிலேயே இருக்கிறது.

போராளி - புத்திசாலி! அதிர்ஷ்டசாலியா...?!
--------------------------------------------------------------------------------------------------------------

மம்பட்டியான்:  விமர்சனம்
-----------------------------------------

நடிகர் : பிரசாந்த் நடிகை : மீரா ஜாஸ்மின் இயக்குனர் :தியாகராஜன்

பணக்காரர்கள், பண்ணை முதலாளிகளிடமிருந்து கொள்ளையடித்து, ஏழை எளியோர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் ஒரு கொள்ளைக்காரனை பற்றிய கதை! பல வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெளிவந்த மலையூர் மம்பட்டியான், அவரது மகன் பிரஷாந்த் நடிக்க, அப்பா தியாகராஜனின் இயக்கத்தில் மம்பட்டியானாக மறு அவதாரம் எடுத்திருக்கிறது!

பண்ணையார் கோட்டா சீனிவாசராவிடம், பண்ணை ஆளாக வேலை பார்க்கும் மம்பட்டியான் பிரஷாந்தின் அப்பாவினுடைய கைகளில் ஒரு நாள் தங்க புதையல் கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் பொருள், புதையல் அரசாங்கத்திற்குதான் சொந்தம், என அதனை அரசாங்கத்திற்கு கொடுக்க ஆயத்தமாகும் மம்பட்டியானின் அப்பாவையும், அம்மாவையும் போட்டு தள்ளிவிட்டு, புதையலை கைப்பற்றும் பண்ணை கோட்டா சீனிவாசராவ், அதனை தட்டிக் கேட்க வரும் மம்பட்டியானையும் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு காலி பண்ணுகிறார். அவர்களிடமிருந்து தப்பும் மம்பட்டியான் பிரஷாந்த், கோவில் திருவிழாவில் பண்ணை கோட்டாவையும், அவரது அடியாட்கள் ஏழெட்டு பேரையும் வெட்டி கொன்று, தன் சகாக்களுடன் அருகில் இருக்கும் காட்டில் தஞ்சம் புகுந்து கொண்டு, அங்கிருந்தபடியே பணக்காரர்களிடமிருந்து கொ‌ள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவி வருகிறார்.

மம்பட்டியானை பிடிக்க போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ், ஒரு பக்கம் தன் போலீஸ் டீமுடன் பகீரத பிராயாத்தனம் செய்தபடி இருக்கிறார். மற்றொருபக்கம் மம்பட்டியான் தலைக்கு பத்து லட்சம் பணமும், பத்து ஏக்கர் நிலமும் விலையாக வைத்து அறிவிப்பும் செய்கிறார். பணத்துக்கும், நிலத்துக்கும் ஆசைப்பட்டு, ஊருக்கு நல்லது செய்யும் மம்பட்டியானை ஊர் மக்கள் யாரும் காட்டிக்

கொடுத்தார்களா...? அல்லது போலீஸ்க்கு போக்குகாட்டினார்களா...? என்னும் விறுவிறுப்பான கொள்ளை கதையினூடே, மம்பட்டியான் பிரஷாந்த்க்கும், கிராமத்து பெண்ணான கண்ணாத்தாள் எனும் மீரா ஜாஸ்மினுக்குமிடையில் ஏற்படும் பரபரப்பான, அழகிய மனதைக் கொள்ளும் காதலையும் கலந்து கட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் கம் மாஜி மம்பட்டியான் நடிகர் தியாகராஜன்!

தாடி-மீசை, அடர்ந்த கூந்தல், அஜானுபாகுவான உருவத்தை சுற்றி படர்ந்த கறுப்பு போர்வை சகிதம் மம்பட்டியானாக பிரஷாந்த் பிரமாதம்! ஓப்பனிங் சீனில் பண்ணையார் கோட்டாவை போட்டுத்தள்ள பிரஷாந்த், குதிரை வண்டியில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக ஆக்ரோஷமாக வரும் காட்சி ஒன்று போதும், அப்பா பாய்ந்த எட்டடியை, பிள்ளை பதினாறடி பாய்ந்து கடந்து விட்டார் என்று சொல்வதற்கு... வாயில் மெழுவர்த்தியை ஏந்தி கை கட்டுகளை தகர்த்து தப்பிப்பது, புத்திசாலித்தனமாக போலீஸ் பிரகாஷ்ராஜிடமிருந்து தன் சகாக்களை விடுவித்து மீட்டு செல்வது, காதலி சொல்லிவிட்டாள் எனும் ஒரு காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சாட்டையடி வாங்குவது என மம்பட்டியானாக நெகிழ வைக்கும் பிரஷாந்த், மீரா ஜாஸ்மின் உடனான காதல் காட்சிகளில் மகிழவும் வைக்கிறார்.

கண்ணாத்தாளாக மீரா ஜாஸ்மின், பழைய மம்பட்டியான நாயகி சரிதா இடத்தை எட்டிபிடிக்க முயன்றிருக்கிறார் அவ்வளவே! ஆனாலும் சின்னப் பொண்ணு சேலை... பாடலில் சரிதாவையும் விஞ்சி சபாஷ் வாங்கிவிடுகிறார். பலே! பலே!!

மம்பட்டியானை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ், முமைத்கானை ஒருதலையாக காதலிக்கும் சின்ன பண்ணையாக காமெடி வடிவேலும் இருவரும் படத்தின் பெரும் பலம்! அதேநேரம், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் இவரது பாத்திரம் ஓ.கே.! பங்களிப்பு பலவீனம்!!

மலையூர் மம்பட்டியான் பாடல்களை அப்படியே இசையமைப்பாளர் எஸ்.தமன், ரீ-மேக்கான மம்பட்டியான் படத்தில் பிரமாதமாக ரீ-மிக்ஸ் செய்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்! அதேமாதிரி இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பச்சை பசேலின், சாஜி குமாரின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாகும்!

தியாகராஜனின் பிரமாண்டம் ப்ளஸ், பிரமாதமான தயாரிப்பு மற்றும் எழுத்து, இயக்கத்தால், புதிய "மம்பட்டியான்", பழைய "மலையூர் மம்பட்டியான்" படத்தை விட ஜொலிக்கிறது என்றால் மிகையல்ல!


-------------------------------------------------------------------------------------------------------------
மெளன குரு ; விமர்சனம்
-----------------------------------------------

நடிகர் : அருள்நிதி       நடிகை : இனியா  -     இயக்குனர் :சாந்தகுமார்


அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!


எந்த தப்புமே செய்யாதே ஹீரோ அருள்நிதி, போலீஸ் செய்யும் ‌‌தொடர் தவறுகளால் அதோகதி ஆகிறார்! அதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுத்து போலீஸை, அருள்நிதி அடித்து துவம்சம் பண்ணுகிறார்... இதுதானே மெளனகுரு கதை... என நீங்கள் யூகித்தால் அதுதான் இல்லை! பொல்லாத போலீஸை பொறுப்புள்ள பெண் போலீஸ் ஒருவரே பார்த்து கொள்கிறார். அருள்நிதி, காதல், கல்லூரி, என மவுனமாக தன் கடமையை செய்வதோடு சரி! இதுதான் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்குமோ? என எதிர்பார்ப்பை கூட்டி விடும் மெளன குரு படத்தின் பெரிய ப்ளஸ்!


பன்ச் டயலாக், வாயில் சதா சர்வ காலமும் புகையும் சிகரெட், சரக்கு, சைடீஸ், சப்போர்ட்டுக்கு சுற்றிலும் நான்கு காமெடி பீஸ் என ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாமல் மெளனமாகவே படம் முழுக்க நடித்து ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி!


ஹீரோயின் இனியாவும், தன் பங்கிற்கு இயல்பாக நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆனாலும் மருத்துவக்கல்லூரி மாணவி தன் வருங்கால மணாளனுக்கு என்ன விதமான இன்ஜக்ஷ்ன் ‌போடப்படுகிறது? எதுமாதிரி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது? என்று கூட காலி இன்ஜக்ஷன் குப்பியை எடுத்து பார்க்காமலும், திடீரென மனநோயாளியாக மாற்றப்படும் ஹீரோ அருள்நிதிக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏரெடுத்துப் பார்க்காமலும் இருப்பது சுத்த போர்! இதை யதார்த்தமாக கதை சொன்ன இயக்குநர், நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
ஃபோர்ஜரி போலீஸ்கள் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி மூவரும் மிரட்டலாக நடித்திருக்கின்றனர் என்றால், வாயும் வயிறுமாக நேர்மையான பிள்ளைதாச்சி பெண் போலீஸாக வரும் உமா ரியாஸ்கான் அவர்களைக் காட்டிலும் மிரட்டலாக நடித்து படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தி இருக்கிறார். அம்மா சுஜாதா, மது, மென்ட்டல் ஆஸ்பத்திரியில் வரும் நண்பன் முருகதாஸ், ஹரிஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!



எஸ்.தமனின் இனிய இசை, மகேஷ் முத்துச்சாமியின் யதார்த்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் பல ப்ளஸ் பாயிண்டுகளுடன் சாந்தகுமாரின் சறுக்காத எழுத்து இயக்கத்தில் "மெளனகுரு"விற்கு சுத்தமான, சத்தமான வெற்றி நிச்சயம்! மெளனகுரு - "மிரட்டல் குரு"















About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends