தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

விளையாட்டு

இது ஆட்டம்... பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!


கொழும்பு: நம்ம இந்தியாவா இது என்று ரசிகர்களே வியந்து போகும் அளவுக்கு நேற்று நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் எட்டு சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடி விட்டது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் நம்மவர்கள் பின்னிப் பெடலெடுத்து விட்டார்கள்.


பாலாஜி, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு, விராத் கோஹ்லியின் புயல் வேக ஆட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கான வாய்ப்பு பறி போகாமல் தப்பி விட்டது.

கொழும்பில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது இந்தியா. இந்தப் போட்டியில் இந்தியா வெல்லாவிட்டால அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறி போயிருக்கும். ஆனால் அதை உணர்ந்து இந்திய வீரர்கள் மிக மிக பொறுப்புடன் ஆடி ஆல் ரவுண்ட் பெர்மான்ஸைக் காட்டி பிரமாதப்படுத்தி விட்டனர்.

ஆட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை இந்திய வீரர்கள் படா சுறுசுறுப்புடன், பொறுப்புடன், விறுவிறுப்புடன் ஆடியதால் மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர்.

முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக அதிரடி வீரர் ஷேவாக் மற்றும் பந்து வீச்சாளர் பாலாஜி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.


பந்து வீச்சில் நேற்று தனது அனுபவத் திறமையை வெளிப்படுத்தினார் பாலாஜி. அவர் மற்றும், அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக தொடக்கம் முதலே சுதாரிக்க முடியாமல் வீழ்ந்து போனது பாகிஸ்தான். பாகிஸ்தான் எப்போதெல்லாம் ரன் குவிக்க முற்பட்டதோ அப்போதெல்லாம் விக்கெட்டைத் தூக்கி பட்டையைக் கிளப்பி விட்டனர் இந்திய வீரர்கள்.


இந்தியாவின் பீல்டிங்கும் நேற்று சிறப்பாகவே இருந்தது. இது நாள் வரை சொதப்பலாக பீல்டிங் செய்து வந்த இந்திய வீரர்கள் நேற்று மிக மிக சுறுசுறுப்புடன் காணப்பட்டனர். பந்து கால் வரை வந்து சேரட்டும் என்று காத்திருக்காமல் ஓடி ஓடிப் போய் பீல்டிங் செய்து பாகிஸ்தானை அலற வைத்தனர்.

இந்தியாவின் இந்த நெருக்கடியான பீல்டிங் மற்றும் பவுலிங் காரணமாக பாகிஸ்தான் அணி ஆல்அவுட் ஆகி 129 ரன்களில் சுருண்டு போனது. பாலாஜி 3 விக்கெட்களைச் சாய்த்தார். அஸ்வின், யுவராஜுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன.

அதன் பின்னர் ஆட வந்த இந்தியாவுக்கு கம்பீல் 3வது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் ஷேவாக்கும், கோஹ்லியும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டினர். 24 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் 29 ரன்களைக் குவித்து வெளியேறினார். ஆனால் கோஹ்லியின் புயல் வேக ஆட்டம் பாகிஸ்தானிடமிருந்து வெற்றியை படு வேகமாக பறித்துக் கொண்டு வந்து விட்டது.

61 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி, 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல யுவராஜ் சிங்கும் 19 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை.


இறுதியில், 17 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 129 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை விசிறியடித்து விட்டது இந்தியா.

இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக் கொண்டு விட்டது. அடுத்து தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது. இதிலும் அட்டகாசமாக ஜெயித்தாக வேண்டும். அப்போதுதான் அரை இறுதிக்கான வாய்ப்பு மேலும் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



டுவென்டி20 ரேங்கிங்: 3வது இடத்திற்கு தாவியது இந்தியா-தென்ஆப்பிரிக்கா 'நம்பர் ஒன்'


துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா, பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து ஐசிசி அவ்வப்போது அணிகளின் தரவரிசையை வெளியிடுகிறது. இதில் சர்வதேச டுவென்டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி கொழும்புவில் நேற்று வெளியிட்டது.

இதில் இந்திய அணி 7வது இடத்தில் இருந்து, 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில், ஆப்கான்ஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய அணிகள் வீழ்த்தியதே, இந்திய அணியின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்.


தரவரிசைப்பட்டியலின் முதலிடத்திற்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணி ஒரு இடம் சரிந்து 4வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்தை பிடித்துள்ளது. அதன்பிறகு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.



பேட்ஸ்மேன்கள் ரேங்கிங்:



பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப்-10 பேர் வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. தரவரிசையில் 2 இடங்கள் சரிந்தாலும் ரெய்னா 5வது இடத்தில் உள்ளார். கம்பிர் 3 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். யுவராஜ் சிங் 15வது இடத்திலும், விராத் கோஹ்லி 10 இடங்கள் முன்னேறி 19வது இடத்தில் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார். அவரை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் உள்ளார். 4 இடங்கள் முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.


பந்துவீச்சாளர்கள் ரேங்கிங்:


பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-10 வீரர்களில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. பாகிஸ்தான் வீரர் சயீது அஜ்மல் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கிராம் சுவன் 2வது இடத்திலும் உள்ளனர். இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 3வது இடத்தில் உள்ளார்.



இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 5 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். இர்பான் பதான் 23வது இடம் பிடித்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள்:
சர்வதேச போட்டிகளில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வரும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் முஹம்மது ஹபீஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 2வது இடத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் 5வது இடத்தில் உள்ளார்.








-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நியூசிலாந்திற்கு எதிரான 2வது டுவென்டி20: கடைசி வரை போராடிய இந்தியா 1 ரன்னில் தோல்வி


சென்னை: நியூசிலாந்திற்கு எதிரான 2வது டுவென்டி20 போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. புற்றுநோயில் இருந்து குணமாகி நேற்று மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங் வழக்கம் போல தனது அதிரடியை காட்டினார்.


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 தொடரில் பங்கேற்றது. இதில் விசாகப்பட்டனத்தில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டுவென்டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

நுரையீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த யுவராஜ் சிங் நேற்று களமிறங்கினார். நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் நிகோல் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.


மற்றொரு துவக்க வீரர் மார்டின் குப்தில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஆனால் அதன்பிறகு வந்த மெக்கல்லம், வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தார். 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களை குவித்த வில்லியம்சன், அஸ்வினிடம் கேட்சாகி அவுட்டானார்.

55 பந்துகளில் 3 சிக்ஸ், 11 பவுண்டரிகளை விளாசிய மெக்கல்லம் 91 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். அடுத்து வந்த பிராங்க்ளின் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

கடைசி கட்டத்தில் கேப்டன் ரோஸ் டெய்லர்(25), ஜேக்கப் ஓரம்(18) ஆகியோர் பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் இர்பான் பதான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை எடுத்தார்.

168 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் கம்பிர் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பி்றகு விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். 22 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசிய ரெய்னா 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராத் கோஹ்லி டுவென்டி20 போட்டிகளில் தனது 2 அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங், கோஹ்லிக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்து ஆடினார். 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங்கிற்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் 41 பந்துகளில் 1 சிக்ஸ், 10 பவுண்டரிகளை விளாசிய விராத் கோஹ்லி 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். அணியின் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கேப்டன் டோணி பொறுமையாக ஆடினார். இதனால் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.


கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4வது பந்தை அடித்து ஆட முயன்ற யுவராஜ் சிங் போல்டானார். 26 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த யுவராஜ் சிங் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். 5வது பந்தில் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன.

கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவிற்கு எதிரான டுவென்டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.









சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்



சென்னை: இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது


டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் காலையிலும், நிïசிலாந்து வீரர்கள் பிற்பகலிலும் பயிற்சி மேற்கொண்டனர்.



இந்திய அணியில் புற்றுநோயில் இருந்து மீண்டு 10 மாத இடைவெளிக்கு பிறகு களம் காணும் யுவராஜ்சிங் ஆட்டத்தை விசாகப்பட்டினம் போட்டியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் ரசிகர்களின் ஆவலை மழை கெடுத்து விட்டது. இன்றைய ஆட்டத்தில் யுவராஜ்சிங் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த்




இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணத்தை கடந்த ஆண்டைப் போல வெல்லும் என்று இந்திய அணியின் தெரிவுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


தெரிவுக் குழுத் தலைவரான ஸ்ரீகாந்தின் பதவி காலம் வருகிற 27ம் திகதி முடிவடைகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், இலங்கையில் டி20 உலகக் கிண்ண தொடர் தொடங்க இன்னும் 8 நாட்கள் உள்ளது. இந்தியா வலுவான அணிகளில் ஒன்றாகும். ஆடும் 11 பேர் கொண்ட அணியை தெரிவு செய்வது அணி நிர்வாகத்தினருக்கு கடினமானதாகும்.

யாரை நீக்குவது என்று முடிவு செய்வது கடினமான காரியமாகும். டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. 100 கோடி மக்களின் பிரார்த்தனை 2011ம் ஆண்டு போல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உலகக் கிண்ண போட்டி முடியும் போது நான் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன்.

தெரிவு குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்கையில் நாங்கள் எல்லோரும் கனவு மட்டுமின்றி இலக்கை வைத்து இருந்தோம் என்றும் அதேபோல் 2011ம் ஆண்டில் இந்திய அணி கிண்ணத்தை வென்று அசத்தியது எனவும் கூறியுள்ளார்.




-------------------------------------------------------------------------------------------------------
சென்னையை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி----------------------------------------------------------------------------------------------------------


ஐபிஎல் 5 தொடரில் 140 ஓட்டங்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.


ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கை கொடுத்த வந்த தொடக்க வீரர் டு பிளசிஸ் இன்று 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக ஆடி வந்த ரெய்னாவிற்கு, ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராவோ 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


சுரேஷ் ரெய்னா 34 ஓட்டங்களை எடுத்து ஐபிஎல் தொடர்களில் 2,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் 44 ஓட்டங்களை சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்ற போது, காலிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த ஜடேஜா, கேப்டன் டோனி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. ஆனால் 9 ஓட்டங்கள் எடுத்த ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


விக்கெட்கள் தொடர்ந்து சரிந்த நிலையில் இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் டோனி, 34 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு மார்கல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் தரப்பில் காலிஸ் 2 விக்கெட்களை எடுத்தார்.


140 ஓட்டங்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்திலேயே மெக்கல்லம் 2 ஓட்டங்கள் எடுத்த தொடக்க வீரர் மெக்கல்லம், அஸ்வின் வீசிய பந்தை அடித்த ஆட முயன்ற போது கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஜாக் காலிஸ், அணித்தலைவர் காம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் 26 ஓட்டங்கள் எடுத்த காலிஸ் அடித்து ஆட முயன்று, டோனியிடம் கேட்சாகி வெளியேறினார்.

ஆனால் காம்பிர் தொடர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு வந்த திவாரி 1 சிக்ஸ் அடித்து 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் வெற்றியை நெருங்கிய நிலையில் அணித்தலைவர் கெளதம் காம்பிர் 63 ஓட்டங்களில் எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிய வெற்றிப் பெற்றது.




பைனலுக்கு முன்னேறுமா சென்னை * இன்று டில்லியுடன் மோதல்


சென்னை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே ஆப்' போட்டிகள் தற்போது நடக்கின்றன. முதல் தகுதிப் போட்டியில் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, பைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்த போட்டியில் (எலிமினேட்டர்)சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிப் போட்டியில் சென்னை அணி, டில்லி டேர்டெவில்சை சந்திக்கிறது

-----------------------------------------------------------------------------------------------
 தோனிக்கு "சூப்பர் விசில் அடிங்க! * சென்னைக்கு வெற்றி தேடித் தந்தார் * மும்பை அணிக்கு
பெங்களூரு:ஐ.பி.எல்., தொடரின் "எலிமினேட்டர் போட்டியில் கேப்டன் தோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சொதப்பலாக ஆடிய மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது.


பெங்களூருவில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப் சுற்றின் இரண்டாவது போட்டியில்(எலிமினேட்டர்) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் களமிறங்கின. "டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங் தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்:

சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. தவால் குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் மிகப் பெரும் "ஷாக் காத்திருந்தது. முதல் பந்தில் முரளி விஜய்(1) அவுட்டானார். இரண்டாவது பந்தில் ரெய்னா(0) போல்டானார். அடுத்த பந்தை குல்கர்னி "வைடாக வீச, "ஹாட்ரிக் வாய்ப்பு நழுவியது. ஹர்பஜன் தனது இரண்டாவது ஓவரை "மெய்டனாக வீச, ரன் வறட்சி ஏற்பட்டது.

அசத்தல் ஜோடி:

பின் பத்ரிநாத், மைக்கேல் ஹசி சேர்ந்து அணியை மீட்டனர். தவால் குல்கர்னி ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஹர்பஜன் ஓவரில் ஹசி 2 பவுண்டரி விளாசினார். போலார்டு ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடிக்க, 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் என்ற கவுரவமான நிலையை எட்டியது. தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் பத்ரிநாத் ஒரு சிக்சர், ஹசி ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். போலார்டு பந்தில் பத்ரிநாத்(47) அவுட்டானார். பிராங்க்ளின் "வேகத்தில் ஹசி(49) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(1) வழக்கம் போல் ஏமாற்றினார்.

அதிரடி ஆட்டம்:

கடைசி கட்டத்தில் தோனி, டுவைன் பிராவோ சேர்ந்து அதிரடியாக ஆடினர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 29 பந்தில் 73 ரன்கள் சேர்த்தனர். குல்கர்னி ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார் தோனி. பின் பிராங்க்ளின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து மலிங்கா, ஆர்.பி.சிங் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார் . மலிங்கா வீசிய போட்டியின் 19வது ஓவரில் பிராவோ 2 பவுண்டரி, தோனி ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் பிராவோ 2 சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்த தோனி அரைசதம் கடந்தார். முதல் 9 ஓவரில் 47 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. கடைசி 11 ஓவரில் மட்டும் 140 ரன்கள் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. தோனி 51(20 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

சொதப்பல் "பேட்டிங்:

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு டுவைன் ஸ்மித் அதிரடி துவக்கம் தந்தார். ஹில்பெனாசின் முதல் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். இவரது அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் சச்சின்(11) ரன் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. ஜகாதி சுழலில் ஸ்மித்(38) வெளியேற, நிம்மதி ஏற்பட்டது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். ஆல்பி மார்கல் "வேகத்தில் தினேஷ் கார்த்திக்(6), ரோகித் சர்மா(14) அவுட்டாகினர். அஷ்வின் வலையில் ராயுடு(11) சிக்கினார். பிராவோ பந்தில் பிராங்க்ளின்(13) வீழ்ந்தார். கேப்டன் ஹர்பஜன்(1) தாக்குப்பிடிக்கவில்லை. மலிங்கா 17 ரன்கள் எடுத்தார். பிராவோ பந்தில் போலார்டு(16) வெளியேற, மும்பை நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. குல்கர்னி(10), ஆர்.பி.சிங்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை தோனி வென்றார்.

சிக்சர் "700

நேற்று ஆல்பி மார்கல் பந்தில் மும்பை அணியின் பிராங்க்ளின் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 700வது சிக்சராக அமைந்தது.

* பிராங்களின் பந்தில் தோனி தனது வழக்கமான "ஹெலிகாப்டர் ஷாட் மூலம் 112 மீ., தூரத்துக்கு ஒரு சிக்சர் அடித்தார். இது இத்தொடரின் "மெகா சிக்சராக அமைந்தது.

அதிவேக அரைசதம்

நேற்று 20 பந்தில் தோனி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் டில்லி அணியின் சேவக்குடன்(20 பந்து, எதிர், ராஜஸ்தான்) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ராஜஸ்தான் அணியின் ஓவேஸ் ஷா(19 பந்து, எதிர், பெங்களூரு உள்ளார்). தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை தோனி பெற்றார்.

மார்கலுக்கு ரூ. 5 லட்சம்

"பவுலிங்-மெஷின் மூலம் வீசப்படும் டென்னிஸ் பந்தில் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிக்கும் "சூப்பர் சிக்சஸ் போட்டியில் சென்னை அணியின் ஆல்பி மார்கல் வெற்றி பெற்றார். 105 மீ., தூரத்துக்கு சிக்சர் அடித்த இவர் ரூ. 5 லட்சம் பரிசாக தட்டிச் சென்றார்.

ஹர்பஜன் "ஹெல்மெட்டில்

பிராவோ வீசிய "பவுன்சர் மும்பை கேப்டன் ஹர்பஜன் "ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் சில வினாடிகள் நிலைதடுமாறிய இவர், விரைவாக சகஜ நிலைமைக்கு திரும்பினார். நல்லவேளை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

"நோ-பால் பிரச்னை

ஹில்பெனாஸ் பந்தில் மும்பை அணியின் போலார்டு போல்டானார். ஆனால் "நோ-பால் தொடர்பாக சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. "ரீப்ளேயில் காலை "கிரீசுக்கு வெளியே வைத்து பந்துவீசியது உறுதி செய்யப்பட போலார்டு தப்பினார். அப்போது 13 ரன் தான் எடுத்திருந்த இவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அடுத்து டில்லியுடன் மோதல்

சென்னை அணி பாதி கிணறு தான் தாண்டியுள்ளது. நாளை சென்னையில் நடக்கும் "பிளே-ஆப் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் டில்லி அணியுடன் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் பைனலில் கோல்கட்டாவுடன் மோதலாம்.

* நேற்று வெற்றி பெற்ற சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை பெற்றது.



About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends