தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

செய்திகள

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை!

கரூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கான அறிவிப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய நாடுகள் பொது சபையில் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி அக்டோபர் 02 ம் தேதி "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்ககது.



f

மனைவியைக் கொன்று கொதி நீரில் 4 நாட்கள் வேக வைத்து எலும்புக் கூடாக்கிய கணவர்!

லாஸ் ஏஞ்சலெஸ்: கோபத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர், மனைவியின் உடலை பாய்லரில் போட்டு நான்கு நாட்கள் வேக விட்டுள்ளார். உடல் முழுவதும் வெந்து கரைந்து எலும்புக் கூடாகும் வரை மகா பொறுமையாக பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த அந்த கொடுமைக்கார நபருக்கு லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் வியன்ஸ். 49 வயதான இவர் ஒரு சமையல்காரர். இவரது மனைவி பெயர் டான். கடந்த 2009ம் ஆண்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் டேவிட். அப்போது கோபத்தில் மனைவியைக் கொலை செய்து விட்டார். பின்னர் ஆத்திரம் தணியாத அவர் வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்தார். அதன் பின்னர் மனைவியின் உடலைத் தூக்கி அதில் போட்டுள்ளார். அடுப்பில் ஏதோ கறியை வேக வைப்பது போல நான்கு நாட்கள் கொதி நீரில் மனைவி உடலைப் போட்டு வேக விட்டார். இதனால் டானின் உடல் வெந்து, கரைந்து போய் எலும்புக் கூடாகி விட்டது. அதன் பின்னர் அடுப்பை ஆப் செய்துள்ளார் இந்த கொடூர மனிதர்.

இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் தனது மனைவியைக் கொன்று அடுப்பில் வேக வைத்ததை ஒத்துக் கொண்டார் டேவிட். மேலும் தனது மனைவியின் உடல் நன்றாக கரைந்து போகும் வகையில் நான்கு நாட்கள் வரை அடுப்பிலேயே வைத்திருந்ததாகவும் அவர் சலனமே இல்லாமல் கூறினார்.

அவரது வாக்குமூலத்தைக் கேட்டவர்கள் ஆடிப் போய் விட்டனர். இந்த நிலையில் டேவிட் வியன்ஸின் கொடுமையான செயலை எந்த வகையான கொலையில் சேர்ப்பது என்பதில் நீதிபதிகளுக்கே குழப்பமாகி விட்டது. இது திட்டமிட்ட படுகொலையா அல்லது தற்செயலாக நடந்ததா அல்லது பழிவாங்குதலா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு பின்னர் டேவிட் வியன்ஸ் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.

டேவிட்டும், அவரது மனைவியும் 20 வருடம் சேர்ந்து வாழ்க்கை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



நாளை தேமுதிகவுக்கு வயசு 8: வறுமையை ஒழிக்க விஜயகாந்த் சூளுரை


சென்னை: தேமுதிக நாளை 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை நம் நாடு எட்டிட அயராது பாடுபடுவோம் என்று இந்த நேரத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேமுதிக அரசியல் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து தனது 7வது ஆண்டை நிறைவு செய்து 8வது ஆண்டை தொடங்குகிறது. நாம் நடந்து வந்த பாதை மேடு பள்ளங்களை கொண்டது என்றாலும், பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் பல நேரங்களில் நம்மை காலை வாரி விட முயன்றாலும் அவற்றை எல்லாம் கடந்து இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களின் நன் மதிப்பை பெற்ற எதிர்க்கட்சியாக விளங்குகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டபோது பொதுமக்கள் சார்பில் எதிர்த்து போராடிய வரலாறு தேமுதிகவிற்கு உண்டு. ஆகவே தேமுதிக என்றும் மக்கள் பக்கம் இருந்து வருகிறது என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாகும்.



சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் தேமுதிக தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியலை மட்டுமல்ல, அரசியலில் ஒரு புதிய பாதையையும் வகுத்து வருகிறது.


இந்த இயக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) தனது 8வது ஆண்டினை தொடங்குகிற நேரத்தில், எவ்வாறு இதுவரையில் ஓயாது, ஒழியாது கழக தோழர்கள் தங்கள் உழைப்பையும், உடைமைகளையும் ஈடுபடுத்தி வருகின்றனரோ, அதே போல மேலும் நம் மக்கள் பணி தொடரும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.


தேமுதிகவினர் கழக கொடியை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நலப்பணிகள் செய்தும், கூட்டங்கள் நடத்தியும், கொள்கைகளை விளக்கியும் கழகத்தின் தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை நம் நாடு எட்டிட அயராது பாடுபடுவோம் என்று இந்த நேரத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.




-------------------------------------------------------------------------------------

 கூடங்குளம் போலீஸ் தாக்குதலைக் கண்டித்து மதிமுக, பாமக இன்று ஆர்ப்பாட்டம்


சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நேற்று போலீஸார் நடத்திய கொடுந்தாக்குதலுக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் மதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


மதிமுக சார்பில் கரூரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகிக்கிறார். சென்னையில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொள்கிறார் என்று மதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியும் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.




ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த விவகாரம்- ஆர்டிஓ சஸ்பெண்ட், மோட்டார் வாகன ஆய்வாளர் கைது


சென்னை: சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருத பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து பலியான துயரச் சம்பவம் எதிரொலியாக, அந்தப் பேருந்துக்கு எப்.சி கொடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆர்டிஓ பட்டப்பசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான ஸ்ருதி, சேலையூரில் உள்ள தனது பள்ளியிலிருந்து மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது முடிச்சூர் சாலையில் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து விட்டாள். இதில் பேருந்தின் சக்கரம் அவளது தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தாள்.

அனைவரின் நெஞ்சங்களையும் இந்த துயரச் சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது. இன்னும் மக்கள் இந்தக் கோரச் சம்பவத்தின் பிடியிலிருந்து மீளாமல் உள்ளனர்.

இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. ஓட்டை பஸ்சுக்கு எப்படி எப்சி கொடுத்தார்கள் என்று கேட்டுள்ள உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அனைவரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு நேற்று பிற்பகலுக்கு மேல் திடீரென தனது உறக்கத்தை நிறுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் யார் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரணை நடத்தவில்லை, கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு வந்ததைத் தொடர்ந்து இன்று கோர்ட்டில் நீதிபதிகள் முன்பு பதிலளிக்க முடியாமல் போய் விடக் கூடாதே என்பதற்காக தாம்பரம் ஆர்டிஓ பட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய இருவரையும் வேகம் வேகமாக நேற்று மாலையில் சஸ்பெண்ட் செய்தனர். பின்னர் ராஜசேகரனை மட்டும் கைது செய்தனர்.



இந்த ராஜசேகரன்தான் 20 நாட்களுக்கு முன்பு ஸ்ருதியின் உயிரைப் பறித்த பேருந்துக்கு நல்ல நிலையில் உள்ளது என்று கூறி எப்சி கொடுத்தவர் ஆவார். இவர் மீது தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவான ஐபிசி 304-2ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கொலை வழக்குக்கு சமமானதாகும்.

தேவைப்பட்டால் ஆர்டிஓவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

--------------------------------------------------------------------------------
ஸ்ருதி மரணத்திற்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை-ஜெயலலிதா




சென்னை: சென்னையில் 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதியின் மரணத்திறக்குக் காரணமானவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



மாணவி ஸ்ருதியின் அகால மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சேலையூர் ஜியோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த முடிச்சூரைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்திலிலிருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன்.

சிறுமி ஸ்ருதியின் மறைவுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்குக் காரணமானோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பழுதான பேருந்தை இயக்கக் காரணமானோர் மீது கல்வித்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.




இன்று பிற்பகலில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

திங்கள்கிழமை, ஜூன் 4, 2012

சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாக உள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளை 11.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்..

இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
http://www.tn.nic.in/tnhome/hscresult.html

http://www.tn.gov.in/dge/default.htm
http://dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in/
http://dge3.tn.nic.in/ ஆகிய இணையங்களிலும் பார்க்கலாம்.






About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends