ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம்
திருப்பிவிட முடியும் .
எனவே , நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும்
ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .
அவற்றை , மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக
இருப்பதற்கு பதிலாக , ஆன்மிக சக்தியாக இருக்கச் செய்யுங்கள்.
பலவீ னத்திற்கான பரிகாரம் , ஓயாது பலவீ னத்தைக் குறித்து
சிந்திப்பதல்ல. மாறாக , வலிமையைக் குறித்து
சிந்திப்பதுதான். அதனால் மக்களுக்கு , ஏற்கனவே
அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்
பற்றிப் போதியுங்கள் .