தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Thursday, June 30, 2011

மழை

நம்ப முடியவில்லை
நிலவிலிருந்து  மழையா .... ?

ஆம் 
என்னவளின் முகத்தில் 
கண்ணீர் !

ஆர். கார்மேகம் ,    ஜெயங்கொண்டநிலை .  

Monday, June 27, 2011

அவள் உதடு .....

அளவுக்கு மிஞ்சினாலும் 
அமிர்தமாய் இனிக்கிறது 
அவள்  உதடு ..... 

சதக்கத்துல்ல ,  மாதவரம் . 

Saturday, June 25, 2011

சந்தானம் கவிதை - 12

உன் தரிசனம்

தேவியின் தரிசனம் காண
கோவிலுக்கு சென்றேன் ...

அங்கே 

பெண்ணே  உன் 
   தரிசனம்  கண்டேன்

Friday, June 24, 2011

நீ அழகு ரோஜா

கற்பனைக்கு கருப்பு ரோஜா
சிந்தனைக்கு சிகப்பு   ரோஜா
உனக்கு நான் அன்பு ரோஜா
எனக்கு நீ அழகு ரோஜா

Thursday, June 23, 2011

புரியவில்லை

கண்ணே !
நீ சுத்த
சைவமென்றாய்....

பின்பு ஏன்
என் உதட்டைக்
கடித்தாய்...? 

உதயை. மு . அழகிரிசாமி,    
திருத்துறைப்பூண்டி                      

நம் காதல் யாரிடமும்

என்னை விட்டுக்
கொடுத்துப் பேசாத நீ 
யாருக்காகவும் 
என்னை  விட்டுக்
கொடுக்க மாட்டாயென்கிற
நம்பிக்கையிலேயே 
நீள்கிறது
நம் காதல் ...!

சிவபாரதி , 
சிதம்பரம்

முடிவே இல்லாத பதை

முடிவே
இல்லாத
பதையில்
பயணம் செய்கிறேன்
முடிவில் நீ  இருப்பாய்
என்று நம்பிக்கையில் 

ஜி .அருண் ,  சே. கூடலூர்

Tuesday, June 21, 2011

கல்லூரி மாணவர் - ஜோக்

" கட்சி  மாநாட்டுக்கு
கல்லூரி  மாணவர்களைக் 
கூட்டி வந்தது 
தப்பாப் போச்சு 
தலைவரே ...."  

" என்ன ஆச்சு ?"

" அவங்களுக்கு,
பிரியாணி  பொட்டலம்
வேண்டாமாம்....
பிட்சாவும், பர்கரும் 
கேக்கறாங்க   !"     

வீடுகளில் மீன்தோட்டி வைப்பது நல்லதா ?

வீடுகளில் மீன்தோட்டி  வைப்பது நல்லதா ?




வீடுகளில் மீன்தோட்டி  வைப்பது நன்மையே தரும் .
இதனால்,வாஸ்து   ரீதியாக ஏற்படும்  தோஷங்கள்
  நிவர்த்தியாகிறது .


வீட்டிர்கு  வடக்கு சுவர்கள் , கிழக்கு சுவர்களை ஒட்டி
 மீன்தோட்டி வைக்கலாம் .
சிவப்பு , பச்சை, மஞ்சள் மீன்கள்    அதிர்ஷ்டத்தைக்
கொடுக்கிறது .

மீன்களை  ஒற்றைப் படை எண்ணிக்கையில் 
வைக்க  வேண்டும் .
அதிகமாக இனப்பெருக்கம்  செயும்  மீன்களை
தவிர்க்க வேண்டும் .

Monday, June 20, 2011

முள்ளும் மலரும்

என் மீதுள்ள
கோபத்தால் நீ பூக்களையும்
வெறுக்கிறாய் !

உன் மீதுள்ள
காதலால் நான் முள்ளையும்
ரசிக்கிறேன் !

கே . தன்ராஜ்
கும்மிடிப்பூண்டி.    

Friday, June 17, 2011

இதயம் இடமாற்றம்

அன்பே
இடமாற்றம் 
தவிர்க்க 
முடியாது  என்றாய் .. !

அப்போதாவது 

நீ 
இதயத்தை 
இடமாற்றம்  
செய்கிறேன்
என்று 
சொல்லியிருக்கலாமே!

ஆர் . கே. லிங்கேசன்   ,
மேலகிருஷ்ணன்புதூர்.            

காதல் - எதிர்பார்ப்புகள்

என் கையெழுத்து
அழகாயிருக்கிறதெனச்
சொன்ன நீ ....,

"எப்போது
என் தலையெழுத்தை
மாற்றியமைக்கப்
போகிறாய் ?

எதிர்பார்ப்புகளிலேயே 
நகர்கின்றன
நாம் சந்திக்கும்  தினங்கள் !

சிவபாரதி ,
சிதம்பரம் .  


Thursday, June 16, 2011

கனல் பார்வை

வானத்து சூரியனும்
வஞ்சி  உன் 
கண்ணும் 
ஒன்றுதான் ....

இரண்டுமே 
என்னை  சுடுகிறது !

அம்பத்தூர் .

Wednesday, June 15, 2011

நீ உயிர்க்காதலி

நிலவுக்கு நீ
தூரத்து  சொந்தம் !

பூக்களுக்கு நீ
உடன்பிறப்பு !

வண்ணத்துப்
பூச்சிகளுக்கு நீ 
அன்புத்தோழி !

எனக்கு  மட்டும்
என்றும்  நீ 
உயிர்க்காதலி  !

கு. வைரச்சந்திரன்,
திருச்சி                                   

தவம்

ரோஜா மலரே !
அவள் கூந்தலில் குடியேற
எத்தனை நாள் தவமிருந்தாய்...

அதன் ரகசியத்தை சொல் 
நானும்    தவமிருக்கிறேன்  
அவள் மனதில் குடியேற...

சங்கீதசரவணன்
பட்டாளம்   

Monday, June 13, 2011

காதல் கண்ணீர்

மனசு பேச நினைப்பதை
உததுகள் பேசி விடும்

உததுகள் பேச மறுப்பதை
கண்கள்  பேசி விடும்

கண்கள் பேச நினைப்பதை
கண்ணீர்  மட்டுமே  பேசிவிடும் .



Sunday, June 12, 2011

என் மனசு

நீ
இதழ் திறந்து
சிரிக்கும்
போதெல்லாம்
கவிழ்ந்த
கப்பலாகி  விடுகிறது 
என் மனசு !

ஏ.மூர்த்தி 
புல்லரம்பாக்கம்   

அவள் வருவாள்

கதவை
திறந்து வைத்தாள்
காற்று
வரட்டும் என்று !

நான்
இதயத்தை 
திறந்து வைத்தேன்
அவள்
வருவாள் என !

பர்வீன் யூனுஸ்
சென்னை - 44


Friday, June 10, 2011

அவள் உடையுடன் ;-

அவளின் கண்களைப்
பார்த்து பேசிய என்
கண்களை
தடம் புரள வைத்தது
அவள் உடையுடன்
பேசிய தென்றல்

எஸ்.டி.ஜி. இளஞ்சேட்  சென்னி 
கீழவாளாடி,                         


சுகமான பயணம்

தொலைதூரம்   பயணம்
ஆணால்ம் களைப்பு
தெரியவில்லை
அருகில் என்னவள் !

மு.சாந்தி ராஜன் 
  பாடி 

Thursday, June 9, 2011

சுவாமி விவேகானந்தர் - 3

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியும் .
ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம்
திருப்பிவிட முடியும் .
எனவே , நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும்
ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .

அவற்றை , மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக
இருப்பதற்கு பதிலாக , ஆன்மிக சக்தியாக இருக்கச் செய்யுங்கள்.

பலவீ னத்திற்கான பரிகாரம் , ஓயாது   பலவீ னத்தைக் குறித்து
சிந்திப்பதல்ல. மாறாக , வலிமையைக் குறித்து 
சிந்திப்பதுதான். அதனால் மக்களுக்கு , ஏற்கனவே 
அவர்களுக்குள்  இருந்து  வரும்  வலிமையைப் 
பற்றிப் போதியுங்கள் .


Wednesday, June 8, 2011

ஒரு காதல் புன்னகை





என் மனதில்
நுறு பூக்கள்
பூத்தது .....

அவள் முகத்தில்
ஒரு புன்னகை
தென்பட்தால்

மு. பெரியசாமி
வீட்டுக்கட்டி

அவள் மௌனம்

மரணம் ஒரு நொடியில்
கொல்லும்

ஆனால் உன் மௌனம்
என்னை

ஒவ்வொரு நொடியும்
கொல்லும்

நான் இறந்ததற்கு அவள் 
மௌன அஞ்சலி  செலுத்தினால்  

ஆனால் அவளுக்கு  தெரியாது

நான் இறந்ததற்கு 
அவள் மௌனம் தான்
காரணம் என்று .




மாது - சீனு - பாகம் - 3









Tuesday, June 7, 2011

சந்தானம் கவிதை - 11

அன்றும் இன்றும்
    உனைநினைத்து

தேனினும் சுவையாய்
  கவிதை வடித்து

உன் மனதில் இடம்  தருவாய்
என 
விழித்து இருக்கிறேன் !!!


Saturday, June 4, 2011

தத்துவக் கவிதை

தன்னை  அறிந்தவன் அசை
பட மட்டான் .

உலகை அறிந்தவன் கோப 
பட  மட்டான் .

இந்த இரண்டையுமே  உணராதவன்
கஷ்டமே 
பட மட்டான் .

துடிக்கும் நினைவுகள்

தூக்கத்தில் அவள் சத்தம் கேட்டு 
எழுந்து விட்டேன் .
ஆனால் அவள்  இல்லை  
பின்புதான் தெரிந்தது
என் இதயத்தில் துடிக்கும்  அவள்
நினைவுகள்

Friday, June 3, 2011

உறவு எனும் தேனீ

பூக்கள் மலர்ந்த பிறகுதான் , தேனீக்கள் வருகின்றன .
மலராதபோது தேனீக்கள் வருவதில்லை .
நீங்கள்  ஒரு மொட்டு போன்று மூடியபடி இருந்து 
கொண்டு தேனீயை அழைத்தால் ,
அவை வராது .
நீங்கள் மலர்ந்துவிட்டால்  , அழைக்கக்கூட தேவையில்லை .
தேனீக்கள் தானாக நம்மைத் தேடி வந்துவிடும் .
அதனால் , அற்புதமான  உறவுகள் வேண்டும் என்றால் ,
அந்த உறவுகளை நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்  .
உங்களை எவ்வாறு மேல்நிலைக்கு
உயர்த்துக்  கொள்வது என்று பாருங்கள் .

சத்குரு ஜக்கிவாசுதேவ் - 2
                                                                

நட்பின் வலிமை

பூவின் வாசத்தை விட
புயலின்  வேகத்தை  விட 
மழையின் உயரத்தை  விட 
தேனின்  சுவையை  விட 
 நட்பின் வலிமைதான்  அதிகம் .  

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends