தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, August 30, 2011

முதல்வன் விநாயகர் பிறந்தநாள்

  விநாயகர்  சதுர்த்தி
             01 - 09 -2011


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
-ஒரு விளக்கம்


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தொ¢ந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம். அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.


அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

- தேஜஸானந்தா
 
தமிழ் யூத் எஸ் எம் எஸ்
                                                      வாழ்த்துக்கள் 

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends