தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, August 30, 2011

முதல்வன் விநாயகர் பிறந்தநாள்

  விநாயகர்  சதுர்த்தி
             01 - 09 -2011


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
-ஒரு விளக்கம்


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தொ¢ந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம். அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.


அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

- தேஜஸானந்தா
 
தமிழ் யூத் எஸ் எம் எஸ்
                                                      வாழ்த்துக்கள் 

Monday, August 29, 2011

தமிழ் ரமலான் வாழ்த்துகள்

தமிழ் ரமலான்  வாழ்த்துகள்
                                   31-08 - 2011  
இஸ்லாம் போற்றும் கருணை

புனித கிரந்தம் ஹதீஸ் கூறுகிறது :
தமிழ் யூத் எஸ் - எம் - எஸ்                
                                   வாழ்த்துகள்


              

நீ எல்லா உயிர்களிடமும் அன்போடு இரு! ஏனெனில் கடவுள் உனக்கு அன்புகாட்டுகிறார்.


குரானில் கூறப்பட்டுள்ளது
உயிர்களைக் கொல்லுதலும் பண்ணைகளை அழித்தலும் உலகுக்கு போ¢டரைத்தரும்; கடவுளும் அவற்றை ஏற்க மாட்டார்!



குரான் 32.22 ல் கூறப்பட்டுள்ளது:
பகவானிடம் மாமிசம் செல்லுவதில்லை! ரத்தமும் செல்லுவதில்லை! ஆனால், அவா¢டம் சேர்வது அவர் ஆணையை ஏற்று நடக்கும் மனிதர் மனம் மட்டுமே!

'ஹதீஸ்' கூறுகிறது :
அது கடுமையான கோடைக்காலம் ஒரு நாய் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு தாகத்தால் நீருக்காக அலைந்து கொண்டிருந்தது. ஒரு வேசி அதன் இரங்கத்தக்க நிலையைப் பார்த்தாள். அதனை குளிப்பாட்டி துடைத்து அதன் தாகத்தை தீர்த்தாள். அந்த புண்ணியத்தால் ஈஸ்வரன் அவன் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டார்.

மற்றொரு நிகழ்ச்சி :
ஒரு பெண் பூனையை கட்டிப்போட்டு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை. தானே தேடிக்கொள்ளவும் அதனை அவிழ்த்துவிடவில்லை. அதனால் அவள் மீது ஈஸ்வரன் பெரும்கோபம் கொண்டார். (ஹதீஸ்-ஸஹீஹ- முஸ்லிம்)


Sunday, August 28, 2011

நன்றிக் - கடன்

பத்து மாதம்
கருவறை ...
வளரும் வரை
அரைவணைப்பு...
வாழ்க்கை 
கற்கும் வரை
அர்ப்பணிப்பு....
இனிய
வாழ்க்கைத்துணை
தேடிச் சேர்த்து  வைத்தல் ... 
இதற்கு நன்றிக்கடன் 
செலுத்துகிறார்கள்  பிள்ளைகள்_
பெற்றோருக்கு....
முதியோர்  இல்லத்திற்கு  
வழிகாட்டி ... ! 

       வி . தமிழ்ச்செல்வி ,
       பெரியகுளம்         

Friday, August 12, 2011

சந்தானம் கவிதை -14

பெண்ணே :-
  உன் விழிகளில்  வரும் 
கண்ணீர்  துளிகள்   

உன் இதழ்களில்  மேல் சிந்தும்போது
என் மனம்  கலங்கவில்லை

ஏன் என்றால் 
 அது சிவந்த ரோஜாவின்   
இதழ்களின்  மேல்

பனி துளி சிந்தியதுபோல்
அழகாக இருந்தது . 

               

Wednesday, August 10, 2011

ரோஜா இதழ்கள்

உன்  இதழ்களைப் பார்த்து
தோற்றுப் போனது
சோகத்தில் தான்
உதிர்கிறதோ
ரோஜா  இதழ்கள் !

அமல்ராஜ் டோமினிக்
பொட்டுவாசாவடி 

என் உதடுகள்

மருதாணி
தடவாமலே
சிவந்து விடுகிறது
என் உதடுகள் ........!
உன் பெயரை
உச்சரிக்கிறேனே !!

   தென்கரை சி. சங்கர் ,
   வந்தவாசி

Tuesday, August 2, 2011

கனவில்+நான்+உன்னோடு

கனவு இல்லையெ ன்றால்
நான் எப்போதோ
இறந்திருப்பேன்

நான் உன்னோடு
வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே !

வாணிராஜன்
சென்னை - 117


Monday, August 1, 2011

உன்னை நினைவுகளை

மார்கழி மாதத்து நிலவினிலே
பனி கொட்டும் இரவினிலே
விதியிலே புள்ளிவைத்து
கோலம்யிட்டால்   

அன்று முதல்

என் மனதில்
உன்னை  நினைவுகளை
வண்ணமிட்டே ன்  !

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends