எனக்கு ஊரும் வேண்டாம்
உறவும் வேண்டாம்
நீ வேண்டும்
பொத்திப்பொத்தி
வைத்தும்
உடைந்து வழிகிறது
கண்ணீர் !
உலை கொதிப்பது போல்
தினமும்
உள்ளம் கொதித்து
குலைகிறது !
நீ தூண்டி விட்டுப் போன
விளக்கு
இன்று
எண்ணை இல்லாமலே
உடலை எரிக்கிறது !
அன்று
காற்றில் கரைந்துபோன
உன் குரலும்
முத்த சத்தமும்
இனி எப்போது ?
தேசம் விட்டு
மறுதேசம் இருக்கும்
என் கண்ணாளா .....
நீ எப்போது
வீ டு திரும்புவாய் ?
என் . மதியழகன்
பெண்ணாடம்