தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Friday, October 28, 2011

பேச எண்ணிய என் உதடு

என்னென்னவோ  
பேச எண்ணிய 
என் உதடு 
உன்னைக்  கண்டதும் 
மவுனமானது !
ஆனால்
மவுனமாய் இருந்த 
என் விழிகள் 
உன்னிடம் 
பேச ஆரம்பித்தது !

 எம் . தனசுதா 
 சீர்காட்சி   

Tuesday, October 11, 2011

வானவில்

அதிகாலை
வானவில்
என்னவளின்
மார்கழிக்கோலம்  !

ஏ. எம் .  செரீப்
                 புதுக்கோட்டை 

நீ வேண்டும்

எனக்கு ஊரும் வேண்டாம்
உறவும் வேண்டாம்
நீ வேண்டும்
பொத்திப்பொத்தி
வைத்தும்
உடைந்து  வழிகிறது
கண்ணீர் !

உலை  கொதிப்பது   போல்
தினமும்
உள்ளம் கொதித்து
குலைகிறது !

நீ தூண்டி விட்டுப்  போன 
விளக்கு
இன்று
எண்ணை இல்லாமலே
உடலை எரிக்கிறது !

அன்று
காற்றில் கரைந்துபோன
உன் குரலும்
முத்த சத்தமும்
இனி எப்போது ?

தேசம் விட்டு 
மறுதேசம்  இருக்கும் 
என் கண்ணாளா .....

நீ எப்போது 
வீ டு திரும்புவாய் ?

என் . மதியழகன்

பெண்ணாடம்  

Friday, October 7, 2011

யாரை காதலித்ததோ

யாரை காதலித்ததோ
மேகம் _
இன்று இப்படி
கண்ணீர்
விடுகிறது !
மழை.

ஜி.முத்து ,
சத்தான்குளம்

Thursday, October 6, 2011

ஜன்னலில் அவள்

நிலவை
சிறைப்பிடித்து
விட்டார்களோ ?
ஜன்னலில் அவள்
முகம் ....

சாஜிதா
ஆத்தூர்

Monday, October 3, 2011

முக்கியமான பெண் கடவுளரில்

lord shiva
Free Spiritual Photos Religious Pictures Quotes
http://animation-gifs-glitter-graphics.blogspot.com


சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளாள்.




இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.



இதயம் உள்ளது

அன்பை சுமக்க இதயம்  உள்ளது
கண்ணீர் வடிக்க   கண்கள் உள்ளது
கடமை முடிக்க கைகள் உள்ளது
என்றும் உன்னை நினைக்க என்
இதயம் உள்ளது

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends