தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Thursday, September 29, 2011

உணர்ந்து கொள்கிறேன்

தென்றல் வந்து
உன்னிடம்
பேசிவிட்டு திரும்பியதாக
உணர்ந்து கொள்கிறேன் !

உன் காதோரக்குழல்
அசைந்தாடும்
தருணங்களில் .

தென்கரை சி.சங்கர் ,
                        வந்தவாசி

Wednesday, September 28, 2011

நட்பே நீ மட்டும்

உலகிற்கு ஒளி தரும்
சூரியனே உரங்க சென்றுவிட்டது

என் உயிர்க்கு  ஆயில் தரும்
என் நட்பே  நீ மட்டும் ஏன்
விழித்திருக்கிறாய்

Monday, September 26, 2011

இன்று - உண்மையான ?

காதலுக்கு கண்ணில்லை 
அது  அன்று

காதலுக்கு உண்மையான
பெண்ணில்லை
இது இன்று

Saturday, September 24, 2011

எங்கள் கிராமம்

பவுர்ணமி இரவிலும்
இருண்டு கிடக்கிறது ,
எங்கள் கிராமம்!
என்னவள்  ஊரில்  இல்லை!! 

வி. சுரேஷ் பாபு ,
காட்பாடி 

Wednesday, September 21, 2011

"இதயத்தில்" இடம் கொடு

உன் மேல் யாராவது அன்பாக
இருந்தால்
"இதயத்தில்" இடம் கொடு !

உன்  மீது  மட்டும் 
பிரியமாக  இருந்தால் 
"இதயத்தை "   யே கொடு !

உண்மையான வரி

அவள் அழகை  ரசிக்க  
என்னிடம்
அழகு இல்லை

என் இதயத்தை நேசிக்க
அவளிடம்
இதயம் இல்லை



கடமையை செய்

காதல் செய் கவிதை  வரும்
காதல் செய்  கவலை வரும்
காதல் செய்  கண்ணிர் வரும்

கடமையை  செய்  காதல்
உன் பின்னால்  வரும் .

ஒரு நொடிகள்

உன்னை நினைக்க ஒரு
நொடிகள் போதும் 

உன்னை மறக்க பல நொடிகள் 
ஆகும் 

ஒரு நாள் அந்த  நதியே
வற்றி போனாலும் 

ஒரு நாளும் 
நம் நட்பு  வற்றாது .

Tuesday, September 20, 2011

இல்லை என்று சொல்லிவிடாதே

சிறகு இன்றி பறந்துவந்த
என்னை

காதல் என்ற கூட்டில்
மாட்டி  கொண்டேன் 

 சிறகு உடைந்த பறவையை
 போல் ஆனேன் .

உன் நினைவை சுமந்த நான்
சுவரேயில்லா சித்திரம்  வரைந்தேன்

உன் இதயத்தில்  இடம் தருவாயா
என்று ஏங்கிணேன் 

இல்லை என்று சொல்லிவிடாதே  
தாங்காது என் இதயம் 

உன் சுமையை  மட்டும்  தாங்கும்    
    என் இதயம்

உன் பிரிவை  தாங்காது
  என் இதயம்


Wednesday, September 7, 2011

அவள் நினைவுகள் .

தூக்கத்தில் அவள் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்.

ஆனால் அவள்  இல்லை
பின்புதான் தெரிந்தது .

என் இதயத்தில் துடிக்கும்
அவள் நினைவுகள் .


 

உன் தோழி

நீ மறக்க நினைத்தாலும்
உனக்குள் இருக்கும்
என் நினைவுகள் மறையாது.

ஒரு முறை
என் பெயரை உச்சரித்து பார்
உனக்குள் நான்.

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends